தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் - டாக்டர் சேதுராமன் அறிவிப்பு !



தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெருக தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அறிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்மாநில இயக்க கருத்தரங்கில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் கலந்து கொண்டார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது
தேசியத்துக்கு பாதிப்பு இல்லாமல் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தென் மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக தென்மாநில இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில், மாநிலங்களை பிரிப்பது தொடர்பாக 15 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், தென்தமிழகம் பிரிய வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் நிர்வாகத்தால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே துவங்கப்படுகின்றன.கடந்த சட்டசபை தேர்தலின் போது எடுக்கப் பட்ட வாக்காளர் கணக்கெடுப்பில் தென்மாவட்ட ஓட்டு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தனி மாநிலம் கிடைக்கும் பட்சத்தில் தான் இங்குள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும். தெற்கும் வாழவேண்டும் என்பதற்காக தான் இந்த இயக்கத்தை துவங்கி உள்ளோம். தென்தமிழகம் பிரிக்கக்கோரி, 25 விதமான போராட்டங்களை இந்த அமைப்பு சார்பில் நடத்த உள்ளோம் என்றார்.

thanks to http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/3210-drsethuraman-then-tamilnadu
தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் - டாக்டர் சேதுராமன் அறிவிப்பு !SocialTwist Tell-a-Friend

2 comments:

thaiprabu said...

சிவாஜி சிலையை அகற்றக்கூடாது

- டாக்டர் சேதுராமன் கருத்து

:தமிழகத்திற்கு மட்டுமல்ல ,இந்திய கலை உலகத்திற்கும் பெருமை சேர்த்தவர் செவலீயே சிவாஜி கணேசன் .
.நடிப்பின் இமயமாக போற்றி புகழப்படுகிற சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை கருத்து தெரிவித்திருப்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும்
கலையுலகில் நடிகர் திலகம் அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ள போக்குவரத்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து சிவாஜி சிலையை அகற்றாமல் தடுக்க வேண்டும் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்

அவர் மேலும் கூறியுள்ளதாவது
சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலை ராதா கிருஷ்ணன் சாலை சந்திப்பில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது என்று போக்குவரத்து காவல்துறை தரப்பில் சொல்லப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது
தன் வாழ்நாளில் யாருக்கும் எந்தவித கெடுதலையும் செய்யாமல் வாழ்ந்து மறைந்த நடிகர் திலகத்திற்கு இப்படி ஒரு அவமானம் ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை இது வரை சிலை இருக்கும் இடத்தில எந்த வி பத்தும் ஏற்பட்டதில்லை
சிலையை அகற்ற வேண்டும் என தீர்மானித்துள்ள போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளிடம் மறு பரிசீலனை செய்ய மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா அவர்கள் அறிவுறுத்துவார் என நாங்கள் நம்புகிறோம்
கோடானுகோடி தமிழர்களின் இதயங்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டுஇருக்க கூடிய நடிகர் திலகம் அவர்களை பெருமை படுத்தும் வகையில் அம்மா அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்
குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் இந்த நேரத்தில் ,சிவாஜிக்கு மணிமண்டபம் தான் கட்டவில்லை என்றாலும் அவமதிப்பதை நடுநிலை மனிதர்கள் விரும்ப மாட்டார்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையால் வலதுப்பக்கம் திரும்பும் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் சரி வர தெரிய வில்லை என யாரோ ஒருவர் சொல்வதை நம்பி இந்த சிலையை அ கற்றும் திட்டத்தினை செயல்படுத்துவது என்பது நடிகர் திலகத்தினை அவமதிக்கும் செயல்
ஒரு வேளை வரும் வாகனங்கள் தெரிய வில்லை என்றால் சிலையை அகற்றாமல் தேவையான கண்ணாடி பிரதிபலிக்கும் வசதிகள் செய்யலாம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்து உள்ளார்

thaiprabu said...

சிவாஜி சிலையை அகற்றலாம் என்பவர்கள் like செய்க..

அகற்றக்கூடாது என்பவர்கள் Share செய்க...