இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக மெளனம் காக்கும் பாரதிராஜா: இயக்குனர் சேரன்
இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகவே இயக்குனர் பாரதிராஜா மெளனம் காப்பதாகவும், அந்த மெளனத்திற்கு தலைவணங்குவதாகவும் இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.
அமீர் தயாரித்து நடித்துள்ள படம் ‘யோகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. படத்தின் இயக்குனர் சுப்பிரமணிய சிவா வரவேற்புரை நிகழ்த்தினார். . தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன், இயக்குனர்கள் பாலா, சேரன், சீமான், சசிகுமார், எடிட்டர் மோகன், நடிகர்கள் ஜெயம் ரவி, சிம்பு, ஜீவா, ஜே.கே.ரித்தீஷ் எம்.பி., விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், கே.ஆர்.ஜி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் பேசும்போது கூறியதாவது:-
எங்களை போன்ற இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனரான பாரதிராஜா, இந்த நிகழ்ச்சியில் மேடை ஏறாமல் கீழே அமர்ந்திருக்கிறார். அவர் சமீப காலமாக எந்த பொது மேடை மற்றும் திரையுலக நிகழ்ச்சி மேடைகளிலும் ஏறாமல் மெளனம் காத்து வருகிறார். அவருக்கு ஏன் இந்த கோபம்? அவர் திரையுலகில் சாதிக்க வில்லையா? பிறகு ஏன் இந்த கோபம்? உண்மையில் அவருக்கு யார் மீதும் கோபம் இல்லை. அவர் விரதம்போல மெளனம் காத்து வருகிறார். தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது கண்டும், தமிழர்கள் ரோஷம் இல்லாமல் இருப்பதாலும் மெளனம் காக்கிறார். அவரது சாதனைகளுக்கு தலை வணங்கியது போல அவருடைய மெளனத்திற்கும் தலை வணங்குகிறேன்.
இலங்கையில் வாடும் இலட்சக்கணகக்கான தமிழர்கள் வாழ்வுக்காக இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கும் போது பாரதிராஜாவின் மெளனம் கலையும். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி http://www.tamilwin.com/view.php?2aSWn5e0d1j0C0ecGG7h3b4X9Ei4d3g2h3cc2DpY3d436QV2b02ZLu3e
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment