ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்லமாட்டேன்.

(பிரிட்டிஷ் பிரதமருக்கு பிரிட்டன் இராணுவ வீரர் ஒருவர் எழுதிய கடிதம்)
நான் 2006-இல் ஆப்கனுக்கு அனுப்பப்பட்டேன். துவக்கத்திலிருந்தே அது சவால் மிக்கதாக இருந்தது. கஞ்சா வயல்களை அழிப்பது நோக்கமா? தேசப்பாதுகாப்புக்கா? எந்தக் காரணத் திற்காக நாங்கள் அங்கே இருக்கிறோம்? பெரும் குழப்பமாக இருந்தது. காரணங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருந்தது.காயமடைந்தவர்களும், சேவைக் காலம் முடிந்தவர்களும், இறந்தவர்களின் சவப்பெட்டிகளும் தாய்நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டுக் கொண்டே இருந்ததைப் பார்த்துக் கொண்டு இருந்த நான் நிலைகுலைந்து போனேன்.செப்டம்பர் 2, 2006 அன்று ஆப்கனில் 14 பேருடன் ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது என் நினைவைவிட்டு அகல மறுக்கிறது. ஒரு ஜேசிபி வண்டியில் ரோட்டில் மேலும் கீழும் அலைந்து சவப்பெட்டி களை டிரக்கில் ஏற்றிக்கொண்டிருந்த டிரைவர்களில் நானும் ஒருவன். சண்டை கூட இல்லாமல் ஏற்பட்ட அர்த்தமற்ற வீண்சாவுகள் அவை.எனது முதல் சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பிய நான், அந்த நாட்டுக்கு என்ன நன்மை செய்தேன் என்பதைக் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு அவமானமாக இருந்தது. இருண்ட நாட்கள் அவை. 2007-இல் ஆப்கானிலிருந்த என்னை, அதிகாரி தகுதிக்கு உயர்த்தி இங்கிலாந்திலேயே பணியமர்த்தினார்கள்.இராணுவத்தில் சேர்ந்தபோது ஆர்வம் நிறைந்த புத்தம் புதிய ஒரு படை வீரனாக இருந்தேன். அதற்குப் பெருமிதம் கொண்டேன். ஆனால், இப்பொழுது ஒரு அதிகாரியாகப் பணியிலிருக்கும் நான், என் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். துன்புறும் ஆப்கன் மக்களின் நல்வாழ்வையும், அங்கிருக்கும் நம் வீரர்களின் நலத்தையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் துயரடைவதை அனுமதிக்கக்கூடாது.இராணுவ விதிகளின்படி வெளிநாடுகளுக்கு பணிபுரிய அனுப்பப்படும் வீரர்களின் பணிக்காலம் 3 வருடங்களில் 13 மாதங்களுக்கு மிகக்கூடாது என்பதை மீறி எங்களை திரும்பவும் ஆப்கானிஸ் தான் செல்லப் பணித்தபோது என்னால் அதற்கு இயலவே முடியவில்லை.நான் தப்பி ஓட வேண்டியிருந்தது. தென்கிழக்கு ஆசிய நாட்டுக்குச் சென்று விட்டேன். நான் ஏராளமாகக் குடித்தேன். மன அழுத்தம் என்ற வார்த்தை சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. ஆனால், நான் மகிழ்வற்று இருந்தேன் என்பது மாத்திரம் உறுதி.எனது படைப்பிரிவு வீரர்களோடு நான் தொடர்பு கொள்ளவில்லை. தலை மறைவாகும் வீரர்களைப் பற்றிய தகவல்கள் அவர்களுக்குத் தெரிந்திருப்பது, அவர்களுக்கு இக்கட்டை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்த்தேன். சில மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியா சென்ற நான், பிறகு அவர்களோடு தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு ஆதரவு தந்தார்கள். இராணுவம் என்னைப் பிடித்துவிடும் என்று எண்ணிக் கொண் டிருந்த வேளையில், பிறகு எனக்கு மனைவியாகப் போகும் கிளைரை சந்தித்தேன். எனக்கு அவள் உருக்குப்போல் உறுதுணையாக இருந்தாள். அவள்தான் என்னை தலைமறைவு வீரர்களுக்கான நேரடித் தொலைபேசியில் தொடர்புகொள்ள வைத்தாள். கடினமாக இருந்தாலும் அதை செய்ய வேண்டியதாயிற்று.மே மாதம் இங்கிலாந்து திரும்பினோம். விமான நிலையத்தில் கைதாவேன் என நினைத்தேன். அங்கு யாரும் வரவில்லை. எனது படைப்பிரிவில் என்னை ஒப்புவித்துக்கொண்டேன். இராணுவ நீதிமன்றத் தின் விசாரணையை எதிர்நோக்கி இருக்கிறேன். இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.(பிரிட்டிஷ் பிரதமருக்கு பிரிட்டன் இராணுவ வீரர் ஒருவர் எழுதிய கடிதம்)-“தி இந்து” நாளிதழிலிருந்துதமிழில் மிலிட்டரி பொன்னுசாமி, திருப்பூர்.
நன்றி http://www.muthalmanithan.com/2009/09/blog-post_99.html
ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்லமாட்டேன்.SocialTwist Tell-a-Friend

No comments: