ராகுல் அறியாமையால் பேசுகிறார்-தா.பாண்டியன்

புதுக்கோட்டை& சென்னை: தேசிய நதிகளை இணைப்பது சுற்று சூழலுக்கு ஆபத்தானது என்று ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியிடம் தேசிய நதிகளை இணைக்கும் திட்டம், பேப்பரில் மட்டும்தான் உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லையே? என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு அவர் பதிலளிக்கையில், தேசிய நதிகளை இணைப்பது என்பது மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் யோசனையாகும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது இந்த நாட்டின் சுற்றுப்புற சூழலை மிகவும் ஆபத்தான பாதைக்கு கொண்டு செல்லும் திட்டமாகும். இந்தத் திட்டத்தை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்க மாட்டேன். இயற்கை மிகவும் பலம் வாய்ந்தது. அதற்கு முரணான பெரிய காரியங்களை செயல்படுத்துவது நல்லதல்ல என்றார்.ஆனால், உங்கள் கூட்டணியில் உள்ள முதல்வர் கருணாநிதி , இத் திட்டத்தை வலியுறுத்துகிறாரே என்று சுட்டிக் காட்டியபோது, இது எனது தனிப்பட்ட கருத்து என்று பதிலளித்தார் ராகுல்.மேலும் நீர்ப்பாசனத்துக்காக உள்ளூர் நதிகளை இணைப்பது தவறல்ல. ஆனால் தேசிய அளவில் பெரிய நதிகளை இணைப்பது ஆபத்தானது என்றார்.ராகுலின் இந்தக் கருத்துக்கு தா.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,தேசிய நதிகளை இணைப்பது மிக அவசியமானது. பல நிபுணர்களும் ஆய்வு செய்து தான் தேசிய நதிகளை இணைக்கலாம் என்று கூறியுள்ளனர். நதிகள் இணைப்பு பல நாடுகளிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில் ராகுல் காந்தி அறியாமையால் பேசுகிறார் நன்றி http://thatstamil.oneindia.in/news/2009/09/11/tn-rahul-is-ignorant-of-facts-says-tha-pandian.html
ராகுல் அறியாமையால் பேசுகிறார்-தா.பாண்டியன்SocialTwist Tell-a-Friend

No comments: