நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை

ஐரோப்பிய வரலாற்றில் என்றும் நடைபெறாத வகையில் சுமார் நூறு கோடி சுவீடிஸ் குறோணர்களை [அறுநூற்று தொண்ணூறு கோடி ரூபைகள் ]பணவைப்பு களஞ்சியத்தில் இருந்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். திருடப்பட்ட பணத்தொகை பெரிய விடயமல்ல திருடப்பட்ட முறையே உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.புதன் அதிகாலை உலங்குவானூர்தி ஒன்றைக் கடத்திவந்த கொள்ளையர்கள் உலங்குவானூர்தியில் இருந்து கயிற்றில் வழியாக இறங்கி களஞ்சியத்தின் முகட்டை உடைத்து ஜி.45 என்ற டிப்போட் பகுதியில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் கொண்டுவந்த உலங்கு வானூர்தியை ஓட்டிய விமானி சாதாரணமான ஒருவரல்ல என்று கூறப்படுகிறது. இராணுவத்தில் பயிற்சி யெடுத்த ஒருவராகவே இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர், அனைவருமே மிகவும் பயிற்றப்பட்ட நபர்களாக உள்ளார்கள். சாதாரண திருடர்களால் செய்ய முடியாத அபார சாதனை இதுவாகும். பயங்கரமான ஆயுதங்களை பாவித்து இதைச் செய்துள்ளார்கள். இதற்காக விசேட முகமூடிகளையும் அணிந்துள்ளார்கள்.இந்தச் சம்பவம் சுமார் 22 நிமிட நேரத்திற்குள் நடந்து முடிந்துள்ளது. உலங்குவானூர்தி சுவீடிஸ் தலைநகர் ஸ்ரொக்கோமில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பணத்தையும் திருடியவர்களையும் கண்டறிய முடியவில்லை. இதன் பின்னர் போலீசார் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர், ஆனால் இவர்களா சந்தேக நபர்கள் என்பதை போலீஸ் ஊர்ஜிதம் செய்யவில்லை.இந்தக் கொள்ளையைக் கண்டு பிடிப்பதற்காக பெருந்தொகையான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சகல ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 100 சந்தேக நபர்களின் பெயர் அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைவரையும் தேடி வலை விரித்துள்ளனர் போலீசார். உலங்குவானூர்தியை செலுத்தியவர் கட்டிடத்திற்கு மிகவும் அருகருகாக அதை அந்தரத்தில் நிறுத்தியுள்ளார். ஒரு சில மீட்டர் இடைவெளியில் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. ஓர் ஆக்சன் திரைப்படத்தில் வருவதுபோல காரியம் நடந்தேறியுள்ளது.
நன்றி http://parantan.com/pranthannews/worldnews.htm



நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளைSocialTwist Tell-a-Friend

No comments: