
காவிக் கொடிகள் சகிதம் இன்று காலை (21.09.2009) புதுடில்லியில் அமைந்துள்ள சிறீலங்கா தூதரத்தை முற்றுகையிட்ட இருபத்திரண்டு இந்து அமைப்புக்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு குவிந்த புதுடில்லி காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருநூறு பேரைக் கைது செய்துள்ளனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்துரைத்திருக்கும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், கடந்த நாற்பது ஆண்டுகளில் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்திருக்கும் சிறீலங்கா அரசு, தற்பொழுது அவர்களை ஏதிலிகளாக்கி மேலும் கொடுமைப்படுத்துவதாகக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.அத்துடன், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு ஈடுபடுகின்ற பொழுதும், இதனைப் பொருட்படுத்தாது அதற்குத் துணைபோகும் செயற்பாடுகளிலேயே இந்திய மத்திய அரசாங்கம் ஈடுபடுவதாகவும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
thanks to http://www.pathivu.com/news/3550/54/.aspx
No comments:
Post a Comment