வெள்ளிக்கிழமை, 04 செப்டம்பர் 2009 00:00 பாலகார்த்திகா அறிவியல்
இன்று கடன் அட்டையின்(Credit card) பயன்பாடு என்பது எல்லார் மத்தியிலும் அதிக அளவில் காணப்படுகிறது. ஒருவர் தன்னிடம் கடன் அட்டை இல்லை என்றால், அவரை நாம் வேற்றுக் கிரகவாசி போல் பார்க்கும் நிலை இன்று. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப்பொருட்களில் இருந்து, பயண முன் பதிவு செய்வது, இணையத்தளத்தில் விற்பனையாகும் பல்வேறு விதமான பொருட்கள் / கணிணி மென்பொருட்கள் வாங்குவது ஆகிய எல்லாவற்றுக்கும் நாம் கடன் அட்டையினைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இதில்தான் துரதிருஷ்டவசமாக அதிக மோசடிகளும், ஏமாற்றுகளும் திருட்டுகளும் நடைபெறுகின்றன.
இன்று கடன் அட்டையின்(Credit card) பயன்பாடு என்பது எல்லார் மத்தியிலும் அதிக அளவில் காணப்படுகிறது. ஒருவர் தன்னிடம் கடன் அட்டை இல்லை என்றால், அவரை நாம் வேற்றுக் கிரகவாசி போல் பார்க்கும் நிலை இன்று. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப்பொருட்களில் இருந்து, பயண முன் பதிவு செய்வது, இணையத்தளத்தில் விற்பனையாகும் பல்வேறு விதமான பொருட்கள் / கணிணி மென்பொருட்கள் வாங்குவது ஆகிய எல்லாவற்றுக்கும் நாம் கடன் அட்டையினைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இதில்தான் துரதிருஷ்டவசமாக அதிக மோசடிகளும், ஏமாற்றுகளும் திருட்டுகளும் நடைபெறுகின்றன.
இத்தனை பரவலான உபயோகத்தைப் பெற்றிருக்கும் கடன் அட்டையினைப் பறிகொடுத்தால்??? தொலைவது என்பது இங்கு அந்த அட்டை தொலைவது பட்டுமல்ல. அந்த அட்டையில் அடங்கியுள்ள அந்தரங்கத் தகவல்கள் திருடப்படுவதும் கூடத்தான். குறிப்பாக இணையதளங்களில் கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை (Transaction) செய்கையில் அல்லது கொள்வனவு (Shopping) செய்கையில் உங்கள் தகவல்கள் திருடப்பட்டுவிட்டால், அது மோசடிக்கு வழிவகுக்கும். மேலும் எவ்வளவு நட்டத்தில் கொண்டு விடும், எந்த விதமான மோசடி நேரும் என்பதை அறிய இயலாது.எனவே, பாதுகாப்பாகக் கடன் அட்டையைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது. கடன் அட்டையில் உள்ள தகவல்களைத் திருடு போகாமல் காப்பாற்றுவது எப்படி, பாதுகாப்பாக இணைத்தளங்களிலும், மற்ற வணிக வளாகங்களிலும் பயன்படுத்துவது எப்படி என்று கொஞ்சம் பார்க்கலாம்.READ MORE...
முதலாவது யோசனை; இதைப்படிக்கும்பொழுது இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான(Silly) யோசனை என்று உங்களுக்குத் தோன்றக்கூடும். ஆனால் பெரும்பாலான கடன் அட்டைகள் திருடு போனபின், கடைகளில், வணிக வளாகங்களில் எளிதில் பயன்படுத்தப்பட்டுவிடுவது இவ்விஷயத்தில் நமக்குள்ள கவனக்குறைவினாலேயே. அது என்ன தெரியுமா? கடன் அட்டையை வங்கியில் இருந்து / தபால் மூலம் (Post/Courier) பெற்றவுடன் அதன் பின்புறத்தில் உங்கள் கையெழுத்துக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் கையொப்பத்தை இடுவதை முதல் பணியாகச் செய்யவேண்டும். இதுவரை உங்கள் கடன் அட்டையில் (Credit Card) அல்லது பற்று அட்டையில் (Debit Card) நீங்கள் கையொப்பம் இட்டிராவிட்டால், கட்டுரையைத் தொடர்ந்து படிக்குமுன், சற்று எழுந்து சென்று முதலில் அந்த வேலையைச் செய்துவிட்டு வாருங்கள். பெரும்பாலான கடைகளில் நேர்முகமாகச் சென்று பொருட்களை வாங்கிவிட்டு, பணத்தை இந்த அட்டைகளின் மூலம் செலுத்துகையில், உங்கள் கயொப்பத்தை ஒப்பிட்டு நோக்கவேண்டியது, கடைக்காரரின் பொறுப்பு. புகைப்படத்துடன் கூடிய அட்டையில்லையெனில், அட்டைக்குரிய நபர்தான் அதைப் பயன்படுத்துகிறாரா என்று பார்க்க, கையொப்பம் ஒன்றே ஒப்பிடப்படுகிறது. நாளை உங்கள் அட்டை தவறிவிட்டால், அதை எடுக்கும் யாராயினும், அதில் கையொப்பமிட்டு, உபயோகப்படுத்திவிடலாம். உங்கள் வங்கியும்/ காப்புறுதி நிறுவனமும் உங்கள் கவனக்குறைவைக் காரணம் காட்டி, நட்ட ஈட்டினை மறுத்துவிடயும் கூடும்.தங்கள் கடன் அட்டையை, தானியங்கி பணம் வழங்கு இயந்திரத்தில் (Automated Teller machine) பயன்படுத்துகையில் எவரேனும் அத்துமீறி உங்களைக் கண்காணிக்க முயலுகிறார்களா, உங்கள் கவனத்தைத் திருப்பப் பார்க்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அப்படி ஏதேனும் தொந்தரவுகள் இருக்குமாயின், அப்பொழுது உங்கள் குறியீட்டு எண்ணை இயந்திரத்தில் கொடுப்பதைத் தவிருங்கள். அல்லது, பிறர் கவனிக்க இயலாதவாறு மறைத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கடன் அட்டைகள் இருக்குமானால், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வெளியில் எடுத்துச் செல்ல வேண்டாம். ஏதாவது ஒரு அட்டையை, குறிப்பாக எதில் குறைவான தொகையை மட்டுமே எடுக்க இயலுமோ அதை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் பணப்பை பறிபோனால், எல்லா அட்டைகளும் ஒருசேரப் போய்விடும். திருடர்கள் அதைப்பயன்படுத்துவது ஒருபுறம். இக்கடன் அட்டைகளை, நிறுத்திவைக்க (Hotlist) ஒவ்வொரு வங்கியும் தனியாக ஒரு கட்டணத்தை வசூலிக்கிறது. அதையும் மனதில் கொள்ளுங்கள். மேலும் உங்கள் பணப்பையை யதேச்சையாகப் பார்க்க நேரும் திருடர்கள், ஏகப்பட்ட கடன் / பற்று அட்டைகளைக் கண்டார்களானால் கண்டிப்பாக அதைக் கைப்பற்ற நினைப்பார்கள்.ஏறக்குறைய எல்லா வங்கிகளுமே, உங்கள் கடன் அட்டையின் வரவு செலவு குறித்த விவர அறிக்கையினை (Statement) உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புவதுண்டு. அதை அசட்டை செய்யாமல், சரிவரக் கவனிக்கவும். நீங்கள் ATMல் பணம் எடுக்கையில் அல்லது வெளியிடங்களில் கொள்வனவு (Shopping) செய்கையில் கொடுக்கப்படும் இரசீதுகளை (Receipts) பத்திரமாக கோப்புகளில் இணைத்து (File) வைத்திருங்கள். இணையத்தளத்தின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை நாட்குறிப்பில் குறித்து வைப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் விவர அறிக்கையுடன் அவற்றை ஒத்து நோக்கி ஏதேனும் முரண்பாடுகள் இருக்குமானால், உடனடியாக உங்கள் வங்கியில் புகார் செய்யுங்கள். ஒவ்வொரு வங்கியும், தமது வாடிக்கையாளர், இத்தகைய முரண்கள் குறித்துத் தெரிவிக்க ஒரு காலக்கெடுவை நிர்ணயித்திருக்கும். எனவே, அறிக்கை கிடைத்ததும் ஒப்பிட்டுப் பார்ப்பதும், ஏதாவது வித்தியாசம் இருந்தால் தெரியப்படுத்துவதையும் காலதாமதமின்றிச் செய்தால், பண நட்டத்தைத் தவிர்க்கலாம்.பல சமயங்களில் மோசடியாளர்கள் போலியான தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் உங்களிடம் வங்கிகள் அல்லது சேவை வழங்குபவர் போல் நடித்து உங்கள் கடன் அட்டை விவரங்களை அறிய முயல்வர். கவனம்..கவனம்... எந்த உண்மையான(Genuine) வங்கியும், இணைத்தளங்களும் உங்களிடம் இத்தகைய தகவல்களைக் கேட்கவே கேட்காது. எக்காரணத்தை முன்னிட்டும் இத்தகைய தகவல்களைத் தொலைபேசி மூலமாகவோ, சம்பந்தமே இல்லாத இணைத்தளங்களுக்கோ கொடுக்கவே கொடுக்காதீர்கள். சில சமயம், நாம் சில பொருட்களை வாங்குவதற்காக இணைத்தளங்களின் மூலம் கோரியவுடன், இத்தகைய போலியான அழைப்புகள் வரும். நாமும், உடனே ஏமாந்துவிடுவோம். இத்தகைய அழைப்புகள் வந்தால், உடனடியாகத் தகவல்களைக் கொடுக்காமல், நமது வங்கியை அல்லது நாம் பொருட்கள் கோரிய இணைத்தளத்தை அணுகி உண்மையான அழைப்புதானா என உறுதிப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.பல வங்கிகள் பாதுகாப்பான முறையில் நேர்முகக் கொள்முதல் செய்வதற்கு ஒரு சிறிய கருவியை (hand held device) வழங்குகின்றன. இக்கருவியில் ஒரு எண் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். நமது கொள்வனவின்போது(Shopping) அக்கருவியில் காணப்பெறும் இரகசியஎண்ணைக் (Secret Code) கொடுத்தால் மட்டுமே நமது பரிவர்த்தனை வங்கியால் ஏற்றுக்கொள்ளப் படும். அதேபோல், இணையத்தின் மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு ஒரு தனியான சங்கேதக் குறியீடும் கொடுக்கப்படுகிறது. கூடியவரை இத்தகைய தனியான பாதுகாப்புக்குறியீட்டு எண்/ சங்கேதங்கள் உள்ள கடன் அட்டைகளையே இணைய தளத்தில் பயன்படுத்துங்கள்.இணைய தளத்தில் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மேலும் பல வழிகளைத் தொடர்ந்து காணலாம்.---------------------------------------------------------------------------------------------------------------------கி.பாலகார்த்திகா
No comments:
Post a Comment