கச்சதீவுக் கடற்பரப்பில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை சிறீலங்கா கடற்படை நிகழ்த்தியுள்ளது.சனிக்கிழமை இரவு கச்சதீவை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு தொகுதி கடற்தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்த சிறீலங்கா கடற்படையினர், மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து கடற்தொழிலாளர்களை துப்பாக்கிப் பிடிகளால் மூர்க்கத்தனமாகத் தாக்கியதோடு, அவர்களின் வசமிருந்த மீன்பிடிகளையும் அபகரித்துள்ளனர்.இதில் காயமடைந்த முருகன், ஜஸ்ரின், இராமமூர்த்தி ஆகிய மூன்று கடற்தொழிலாளர்களும் இராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி http://www.pathivu.com/news/3480/54//d,view.aspx


No comments:
Post a Comment