நமது இரத்தத்தில் இரண்டு வகையான கொழுப்பு புரதங்கள் காணப்படுகின்றன.1.உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன் (HDL Colestral)2.தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன் (LDL Colestral)இதில் தாழ் அடர்த்தி லிப்போ லிப்போ புரோட்டீன் (LDL Colestral) அதிகரிக்கும் போது அவை இரத்த நாளங்களில் படிந்து இதய நோய் வருவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.ஆனால் உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் (HDL Colestral)தேவையற்ற கொழுப்பை இரத்தச் சுற்றோட்டத்திலிருந்து வெளியேற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்திற்கு உகந்த உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் (HDL Colestral) மீன்களில் செழுமையாகக் காணப்படுகிறது.எனவே நமது அன்றாட உணவு வகைகளில் மீன்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லதாகும்.மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும் கால்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன. இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும் வைட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.மேலும் மீன்களில் காணப்படும் ஒமேகா – 3 (OMEGA-3) எனப்படும் கொழுப்புப் பொருள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.சருமநோய் வராமல் தடுக்கிறது.முடக்குவாதம், மூட்டுப்பிடிப்பு போன்ற எலும்பு தொடர்புடைய கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.அனைத்திற்கும் மேலாக, இதயத்தாக்கு (Cardiac Arrest) வராமல் காக்கிறது.அப்ப எல்லோரும் நல்லா மீன் சாப்பிடுங்க!பின் குறிப்பு:மீனை எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும்.
இதயத்தை இதமாக்கும் அருமை உணவு! மீன் சாப்பிடுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment